Idhayam Matrimony

புதிய கல்விக்கொள்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புதிய கல்விக்கொள்கை, பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் மே மாதம் சமர்ப்பித்தது. அதன்பின்னர், பொதுமக்களின் கருத்துகள் கேட்பதற்காக வெளியிடப்பட்டது. அதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை மத்திய அரசுக்கு தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவை இந்த புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கல்விக்கொள்கை குறித்து பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், கல்விக்கொள்கை மூலம் இந்தியாவில் கற்பித்தலில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க செய்கிறது. புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறு விஷயங்களை கூறினார்.

தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பல அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை மற்றும் பள்ளிகளை திறப்பது எப்போது என்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தலைமை செயலாளர் சண்முகம், முதல்வரின் செயலாளர்களில் கல்வித்துறையை கவனித்துக் கொண்டு இருக்கும் எஸ்.விஜயகுமார், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து