Idhayam Matrimony

சீனாவில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் புதிதாக 36 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன சுகாதார அமைப்பு கூறியதாவது , 

கடந்த 24 மணி நேரத்தில் 36 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 36 பேரில் 30 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான கொரோனா தொற்றுகள் சின்ஜியாங் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை 84,464 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் பலியாகி உள்ளனர்.

தலியன், உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து