Idhayam Matrimony

கவர்னர் பன்வாரிலால் நலமுடன் உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தமிழக கவர்னர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து கவர்னர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 38 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து கவர்னர் பன்வாரிலாலுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்ததில் நலமுடன் உள்ளதாகவும் 7 நாள் தனிமைப்படுத்தப்படவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று கவர்னர் பன்வாரிலால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.  தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கவர்னர் பன்வாரிலாலுக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கவர்னரை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து