எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் பெருத்த சேதத்தினை மும்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தெற்கு மும்பையின் கோலபா பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் மழை பதிவானது.
மழை மற்றும் மணிக்கு 107 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாநில முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேட் வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து தொடங்கும் மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கோலபா பகுதியில் ஒரே நாளில் 333.8 மி.மீட்டர் மழை பதிவானது. இது 1974-ம் ஆண்டுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் பெய்த மிக அதிக அளவு மழை பொழிவாகும். மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 64 சதவீதம், முதல் 5 நாட்களிலேயே பெய்துள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


