முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ல் பதிவு செய்யும் ரஷ்யா

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசால்  தற்போது உலக முழுவதும் சுமார் 1.9 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். 

உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. 

கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது. ரஷ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்து  உள்ளன.  

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்ஹைல் முரஸ்கோ கூறியதாவது:-

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. 2020 அக்டோபர் முதல் தடுப்பூசி மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி தொடர்பான அனைத்துச் செலவுகளும் மாநில பட்ஜெட்டில் அடங்கும்.  இந்தத் தருணத்தில் மூன்றாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை முயற்சிகள் மிக முக்கியம். நாங்கள் தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.  

கொரோனா தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை ரஷ்யா அறிவித்ததையடுத்து, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து