Idhayam Matrimony

இலங்கையில் அனைத்து பள்ளிகளும் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : இலங்கையில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. பாதிப்பு சற்று தணிய தொடங்கியதும், கடந்த ஜூலை மாதம், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால், கொரோனா வேகம் மீண்டும் அதிகரித்ததால், பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், இலங்கையில் அனைத்து பள்ளிகளும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. 

200 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றி, முன்புபோல் இயங்கலாம். 200 மாணவர்களுக்கு மேற்பட்ட பள்ளிகள், சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்பதால், எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் வகுப்புக்கு வரலாம் என்று முடிவெடுத்து செயல்படலாம்.

ஆனால், பள்ளி உணவகம் திறக்க அனுமதி இல்லை என்று கல்வித்துறை செயலாளர் சித்ரானந்தா தெரிவித்தார்.   இலங்கையில், கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 844 ஆகவும், பலி எண்ணிக்கை 11 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து