எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இடுக்கி : கேரளாவின் இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக நேற்று உயர்ந்து உள்ளது.
கேரளாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி பருவமழை தொடங்கி பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன.
இந்த தேயிலை தோட்டங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.
இதில், ராஜமலை பகுதியில் கனமழையால் கடந்த வெள்ளி கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன. இந்த சம்பவத்தில் சிக்கி பலர் பலியானார்கள்.
தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வந்தது. இந்நிலையில், சம்பவ பகுதியில் இருந்து நேற்று ஒருவரது உடல் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது என இடுக்கி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


