ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      விளையாட்டு
Dishant Yagnik 2020 08 02

Source: provided

ஜெய்ப்பூர் : ஐ.பி.எல். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 2020 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக அணிகள் வருகிற 21-ம் தேதி துபாய் புறப்பட இருக்கிறது,

புறப்படுவதற்கு முன் அணியைச் சேர்ந்த அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  கொரோனா இல்லை என்பது உறுதியான பிறகுதான் துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷந்த் யாக்னிக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவர் தனது டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும், பி.சி.சி.ஐ.-யின் வழிகாட்டு நெறிமுறைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியுடன் இணைய எனக்கு இன்னும் இரண்டு நெகட்டிவ் முடிவு தேவை என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து