ஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      உலகம்

வாஷிங்டன் : ஈரானில் இருந்து வெனிசுலாவிற்கு பெட்ரோல் ஏற்றிச்சென்ற நான்கு சரக்கு கப்பல்களை அமெரிக்கா சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுஆயுதம் தயாரித்தல், அணுஆயுதம் ஏவுகணை தயாரித்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எப்போதுமே பதற்றமான சூழ்நிலையே இருந்து வருகிறது.  ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் முதன்மை நாடாக விளங்கி வருகிறது.

இதை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. தன்னுடைய நட்பு நாடுகளிடம் ஈரானில் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. 

இதற்கிடையில் மத்திய கிழக்கு பகுதியான பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்தப் பகுதியில் செல்லும் கப்பல்களை தங்களது கடற்எல்லைக்குள் நுழைந்ததாக அடிக்க ஈரான் சிறைப்பிடிப்பது வழக்கம். அதன்பின் விடுவிக்கும்.  

இந்நிலையில் ஈரானில் இருந்து வெனிசுலாவிற்கு சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற நான்கு சரக்கு கப்பல்கள் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.  முதன்முறையாக அமெரிக்கா இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.

பொருளாதார தடையை மீறி ஈரான் அரசு செயல்பட்டதாக இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.  கடந்த மாதம் அமெரிக்க அரசு சார்பில் நான்கு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறக்குமாறு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார தடை நிபுணர்கள், சர்வதேச கடல் எல்லையில், பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிடுவது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் கப்பல் உரிமையாளர்கள், காப்பிட்டு நிறுவனத்தினர், கேப்டன் ஆகியோரை, தற்போது இது அமெரிக்கா சொத்து, இதனால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து