Idhayam Matrimony

வெள்ளை மாளிகைக்கு பார்சலில் விஷம் அனுப்பிய விவகாரம்: பெண் கைது

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பார்சலில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா - கனடா எல்லையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்படும் அனைத்து தபால்களும் ஆப்சைட் ஸ்கிரீனிங் முறையில் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டு அதிபரின் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் டிரம்புக்கு வந்த ஒரு பார்சல் வழக்கம் போல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அந்த பார்சல் வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பே அதிகாரிகள் அதனைத் தடுத்து சோதித்தனர்.  அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால் (எப்.பி.ஐ.) சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அதிபர் டிரம்புக்கு அனுப்பப்பட்ட பார்சலில், ரிச்சின் என்ற ஆபத்தான கொடிய விஷ பவுடர் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து டிரம்ப் பெயரிட்ட பார்சல் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது? என்பது குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த நிலையில், வெள்ளை மாளிகைக்கு ரைசின் விஷப்பொருள் அடங்கிய பார்சலை அனுப்பியதாக  பெண் ஒருவரை கைது எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்கா - கனடா எல்லையில் கைதான அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து