Idhayam Matrimony

வரும் 29-ல் மருத்துவக் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

செப்டம்பர் 30- ம் தேதியுடன் 8-ம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், வரும் 29-ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார். 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் படையெடுக்க தொடங்கியது. இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமே இருந்தது. அதிலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர், பலகட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு, அவற்றில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.  தொடர்ந்து, தற்போது செப்டம்பர் இறுதி வரை 8-ம் கட்ட ஊரடங்கானது அமலில் உள்ளது. இருப்பினும் இவற்றில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை செய்துகொண்டிக்கும் சூழலில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவ்வாறு இருக்கிறது?,  மேலும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மருத்துவ குழுவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க மருத்துவ நிபுணர்களுடன் வருகிற 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். ஏனென்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்திலும் சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையானது அதிகரித்த வண்ணமே இருந்து. இதனால் தற்போது அதிகளவு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இறப்பு விதமானது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மாவட்டந்தோறும் கொரோனாவின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய மாவட்ட கலெக்டர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனைகள் முடிந்த பின்னரே 9-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அல்லது நிறுத்தப்படுமா? என தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து