முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் ஒதுக்கீடு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடக அரசு சார்பில் சமீபத்தில் வாங்கப்பட்டு இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த புதிய சொகுசு காரை தேவேகவுடாவுக்கு ஒதுக்கி எடியூரப்பா உத்தரவிட்டார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தனக்கு வசதியான கார் வேண்டும் என்று மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து சமீபத்தில் வாங்கப்பட்டு இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த புதிய சொகுசு காரை தேவேகவுடாவுக்கு ஒதுக்கி எடியூரப்பா உத்தரவிட்டார்.  

காப்பீடு, சாலை வரியோடு இந்த காரின் விலை ரூ. 76 லட்சமாகும். அரசு கார் என்பதால் வரியில்லாமல் ரூ. 60 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் என்பதை கருத்தில் கொண்டு விலை உயர்ந்த கார் வழங்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறையின் சார்பில் புதிய கார்களை வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளில், அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கார்கள் ரூ. 22 லட்சத்துக்கு மிகாமலும், வாரியங்கள், கழகங்களின் தலைவர்களின் கார்கள் ரூ. 11 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேவேகவுடாவுக்காக விதிகள் மாற்றப்பட்டு, ரூ. 22 லட்சத்துக்குப் பதிலாக ரூ. 60 லட்சம் மதிப்பில் கார் வாங்கப்பட்டுள்ளது.  இதற்கு எடியூரப்பா சிறப்பு அனுமதி அளித்ததாக அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கர்நாடக அரசில் ரூ. 60 லட்சம் அளவுக்கு விலை உயர்ந்த வால்வோ காரை வைத்திருக்கும் அரசியல்வாதி தேவேகவுடா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து