Idhayam Matrimony

அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      இந்தியா
Modi-1-2025-05-27

இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அருணாசல பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ.5,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: சூரிய கதிர்கள் முதலில் அருணாசல பிரதேசத்திற்கு வந்தாலும் வளர்ச்சியின் கதிர்கள் வர தசாப்தங்கள் ஆனது. காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முழு வடகிழக்கு பகுதிக்கும் தீங்கு விளைவித்தது.

அதனால், வளர்ச்சி பின் தங்கியது. பிரதமரான பின் 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். அருணாசல பிரதேசம் சூரியன் உதிக்கும் பூமி மட்டுமல்ல. தேச பக்தி எழுச்சியின் பூமியும் கூட; மூவர்ணக்கொடியின் முதல் நிறம் காவியில் இருப்பது போல் அருணாசல பிரதேசத்தின் முதல் நிறமும் காவிதான். அருணாசல பிரதேசத்தின் மக்கள் துணிச்சல் மற்றும் அமைதியின் சின்னம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து