Idhayam Matrimony

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதா: மத்திய அமைச்சர் கைலாஷ் சௌத்ரி பேச்சு

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர் : விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டதாக மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் இது குறித்து பேசிய கைலாஷ் செளத்ரி,  மாநில தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகள் நலனுக்கான காங்கிரஸ் கட்சி உழைக்கும் என்று கூறிய நிலையில், தற்போது பா.ஜ.க. அதனைச் செய்தால் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனை நோக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது. பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது புரட்சிகரமான ஒன்று.

விவசாயிகள் சுயம் சார்ந்து வருவாய் ஈட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. 

விவசாயிகளின் அனுமதியுடனே மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இந்த மசோதாக்களின் மூலம் விவசாயிகள் எங்கிருந்தாலும் விளைப்பொருள்களை தாங்கள் நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யலாம். விளையும் பயிர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும், விவசாய நிலங்களில் எந்த ஒப்பந்தமும் இல்லை. எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து