எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ கோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
17 பேர் இறந்து விட்டதால், 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தினசரி விசாரணை நடந்து வந்தது. 350 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இறுதியாக, குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்தது. கொரோனா காலமாக இருப்பதால், பெரும்பாலானோர் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். தாங்கள் நிரபராதி என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இம்மாத தொடக்கத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. லக்னோ சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு அளிக்கிறார். 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்ததால், அவர்கள் ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
பாபர் மசூதியை இடிக்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கிலும் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
நீதிபதி எஸ்.கே.யாதவ், ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும், தீர்ப்பு அளிக்கப்படும் வரை அவரது பணிக்காலத்தை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது. இன்று தான் அவரது கடைசி பணி நாளாக இருக்கும் என்று தெரிகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பர் 30-ந்தேதி தான், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


