மராட்டியத்தில் மேலும் 97 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      இந்தியா
corona-virus

Source: provided

மும்பை : மராட்டியத்தில் மேலும் 97 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு  மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது. 

கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 97 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,079 ஆக உயர்ந்துள்ளது.  இந்த ஆட்கொல்லி நோய்க்கு நேற்று மேலும் 2 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 22,614 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 2,205 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து