Idhayam Matrimony

குளறுபடி ஏற்பட்ட நிலையில் நீட் தேர்வு முடிவு புதிய பட்டியல் வெளியீடு

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் புதிய பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அந்த தேர்ச்சிப் பட்டியலில் மாநில வாரியான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.  இதில் குறிப்பாக திரிபுரா, உத்தராகண்ட் மாநில பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திரிபுரா மாவட்டத்தில் 3,536 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தார்கள். ஆனால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட பட்டியலில் திரிபுராவில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88,889 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல உத்தராகண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 37,301 பேர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் பட்டியல் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த தவறுகளை திருத்தம் செய்து புதிய முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதனை தொடர்ந்து  நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய புதிய புள்ளிவிவரப் பட்டியல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் - 3,536 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் - 88,889 பேர், உத்தரகண்ட் மாநிலத்தில் நீட் எழுதியவர்கள் - 12,047 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் - 37,301 பேர், தெலுங்கானாவில் தேர்வு எழுதியோர் - 50,392 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் - 1,738 பேர் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து