Idhayam Matrimony

இந்தியாவில் பிங்க் பால் கிரிக்கெட் விளையாட உள்ளது இங்கிலாந்து: பி.சி.சி.ஐ. ஆலோசனை

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இங்கிலாந்து : கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பி.சி.சி.ஐ உறுப்பினர்கள் வெர்ச்சுவல் மீட்டிங்கில் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசித்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போலவே இந்தியாவில் மூன்று முதல் நான்கு மைதானங்களில் பயோ-செக்யூரிட்டி முறையில் இங்கிலாந்து - இந்தியா தொடரை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதில் அகமதாபாத் அல்லது கொல்கத்தாவில் பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நடத்த உள்ளதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ள இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஏனென்றால் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட உள்ள வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.பி.எல். தொடரின் பயோ செக்யூரில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து