முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயார் மரணம்: முதல்வர் எடப்பாடியிடம் தொலைபேசி மூலம் இரங்கல்: தெரிவித்தார் ஜெகன்மோகன்

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நல குறைவால் கடந்த 12-ம்  தேதி நள்ளிரவு காலமானார். உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட சுற்றுப்பயணங்களை ரத்து செய்து விட்டு சென்னையில் இருந்து இரவோடு இரவாக தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். 

சேலத்தில் தாயாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதோடு, இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தாயாரின் காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அங்கேயே தனது வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் காரியங்களை முடித்து விட்டு, கடந்த ஞாயிறன்று இரவு சென்னை வந்து சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் தவுசாயம்மாளின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

அதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று (20.10.2020) தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து