எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா-இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக சிறந்த உறவுகள் நீடித்து வருகின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இதன்படி நேற்று முன்தினம் லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இங்கிலாந்து இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஜவுளி, காலணி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும், இரு நாடுகளும் இதன் மூலம் பயனடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே பல ஆண்டுகளுக்கு பிறகு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக இங்கிலாந்துடனான ஒப்பந்தத்திற்கு மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்திருந்தது. அதே சமயம், இந்த ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வர சுமார் 12 முதல் 15 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


