Idhayam Matrimony

சென்னையில் இருந்து தைலாபுரத்திற்கு பா.ம.க. தலைமையகம் மாற்றம்: ராமதாஸ்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      தமிழகம்      அரசியல்
Ramadoss-1

விழுப்புரம், சென்னையில் இருந்து பா.ம.க. தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:- சென்னையில் இருந்து பா.ம.க. தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பா.ம.க.வின் தலைமை அலுவலகம் தைலாபுரம் இல்லத்தில் தான் செயல்படுகிறது. சென்னையிலோ வேறு பகுதியிலோ தலைமை அலுவலகம் வைத்திருந்தால் அது சட்டத்திற்கு புறம்பானது.

பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக சொல்வது, தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்

சிறப்பு பொதுக் குழுவின்படி பா.ம.க.வின் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை 'தலைவர்' எனக் கூறி கொண்டால் நடவடிக்கை பாயும். என்னை தவிர யாரும் உரிமை கோர முடியாது. மே மாதம் முதல் பா.ம.க.வின் தலைவர் ராமதாஸ், கவுரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அண்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பட்டு உள்ளது. கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு யாராவது, 'நான்தான்' என பவனி வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

பா.ம.க. கொடியை யாரும் பயன்படுத்தக் கூடாது, என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம். அன்புமணியின் நடைப்பயணத்தால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து