எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், இந்தியா பிரிட்டன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியா பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரதமர் மோடி கூறியதாவது: இந்த ஒப்பந்தம் சாதாரண பொருளாதார ஒப்பந்தம் மட்டும் கிடையாது. பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. ஒரு புறம், இந்திய ஜவுளித்துறை, காலணி, நகைகள், நவரத்தினங்கள், பிரிட்டன் சந்தையை எளிதில் அணுக முடியும். இந்திய விவசாயப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு பிரிட்டனின் சந்தையில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில்துறையினனுக்கு பலன் கிடைக்கும். மறுபுறம், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பிரிட்டனில் தயாராகும் பொருட்கள் சாதாரண விலையில், இந்திய மக்களுக்கும் தொழில்துறையினருக்கும் கிடைக்கும்.
அகமதாபாத்தில் கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இரு நாட்டு உறவுகளுக்கு இடையே பாலமாக செயல்படுகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருந்து படைப்பாற்றல், அர்ப்பணிப்பை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு, பிரிட்டனின் பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, விளையாட்டு, கலாசாரம் மற்றும் பொது சேவையிலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


