எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 9-வது முறையாக மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
மேலும் 3 மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஆணையத்தின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மருத்துவ குழு அமைத்து விசாரணை செய்ய அப்போலோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையும் நிலுவையில் இருக்கிறது.
ஆறுமுகசாமி விசாரணைக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முடிவடைந்த நிலையில் 8-வது முறையாக 4 மாதம் கால நீட்டிப்பு செய்து அக்டோபர் 24-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.
மூன்று மாதத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறக்கப்பட்டு, பல்வேறு காரணமாக 34 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 9-வது முறையாக மேலும் 3 மாதமாக கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


