எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் நேற்று தொடங்கியது.
கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நாள்தோறும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முன் வந்துள்ளது.
அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் நேற்று தொடங்கியது. திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் நேற்று காலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டது. அலிபெரியில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் இன்று ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


