எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காபூல் : ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும், அரசுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் தோகாவில் நடைபெற்று வருகின்றன. எனினும், வன்முறை தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடக்கும் மோதலில் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது.
இந்நிலையில் வடகிழக்கு நகரமான குந்தூஸ் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். டலோகா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோர்ட்டார் ரக குண்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
வன்முறையின் உச்சமான இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஆப்கானிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து தலிபான் இயக்கம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


