எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் மேலும் 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் மேலும் 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,68,340 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,43,838 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 2,133 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,586 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 2,11,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,14,70,439 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 69,190 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 217 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 12,916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த ஒரு நபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவி்த்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


