Idhayam Matrimony

சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் ரப்பர் பாம்புதான் பயன்படுத்தப்பட்டது: வனத்துறையினர் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தில் ரப்பர் பாம்புதான் பயன்படுத்தப்பட்டது என்று வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ் லுக் போஸ்டரில் சிம்பு கரும்பு காட்டுக்குள் நின்று கொண்டு கையில் ஒரு பாம்பை வைத்திருப்பதுபோல் இருந்தது.

மேலும் சிம்பு ஒரு பாம்பை பிடித்து சாக்கு பைக்குள் போடுவது போன்ற வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனை தொடர்ந்து சிம்பு பாம்பை துன்புறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், இதுபற்றி விளக்கம் கேட்டு படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து, அந்த காட்சி எடுக்கப்பட்டது குறித்து, இயக்குனர் சுசீந்திரன் வனத்துறை அதிகாரியிடம் நேரில் சென்று விளக்கினார்.

இது குறித்து வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் கூறும் போது, ரப்பர் பாம்பை வைத்து நுணுக்கமாக எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழு விளக்கியதாக தெரிவித்தார்.  இந்த காட்சி குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தத்ரூபமாக எடுத்துள்ள படக்குழுவினரை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து