முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரு நானக் ஜெயந்தி : போராட்ட களத்திலும் வழிபாட்டில் ஈடுபட்ட விவசாயிகள்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற கோரியும் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். 

இதற்காக, லாரிகளிலும், டிராக்டர்களிலும் படையெடுத்த விவசாயிகள், உணவு பொருட்களை உடன் எடுத்து சென்று, அவர்களே சமைத்து உண்டு, இரவில் கடும் குளிரில் படுத்து உறங்கி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுபற்றி டெல்லி வடக்கு பகுதிக்கான போலீஸ் இணை ஆணையாளர் சுரேந்திரா கூறிய போது அவர்கள் அமைதியுடனும், கட்டுப்பாட்டுடனும் உள்ளனர். விவசாயிகளுடன் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். எங்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட வேண்டும். அதற்காக போதிய படைகளை குவித்து உள்ளோம் என கூறினார். 

இந்த நிலையில் சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிங்கு எல்லை பகுதியில், நின்றபடி தங்களது இறை வணக்கத்தினை செலுத்தி கொண்டனர். இதேபோன்று திக்ரி எல்லை பகுதியில் இருந்த விவசாயிகள் தரையில் அமர்ந்தபடி, இறை நூல்களை படித்தும், பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து