முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோ பைடன் காலில் சுளுக்கு குணமடைய டிரம்ப் வாழ்த்து

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப் பணிகளை தொடங்கி உள்ளார். தனது அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்களை தேர்வு செய்து வருகிறார். 

இந்நிலையில் பைடன் சனிக்கிழமை தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவருக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்டார்.

இதனையடுத்து டெலாவரில் உள்ள எலும்பியல் சிகிச்சை மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், அவரது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பு தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. 

பைடனுக்கு வலது காலில் சுளுக்கு ஏற்பட்டிருப்பதை அவரது மருத்துவர் கெவின் ஓ கென்னார் உறுதி செய்துள்ளார். பைடனுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் அதேசமயம் பல வாரங்களுக்கு நடைபயிற்சிக்கான பூட்ஸ் அணியவேண்டியிருக்கும் என்றும் மருத்தவர் கூறி உள்ளார். பைடன் விரைவில் குணமடைய வேண்டும் என அதிபர் டிரம்ப் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து