எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் மேலும் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் நேற்று யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழகத்தில் 1,409 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் என 1,410 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 385 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 1,456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு 10,997 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,57,750-ல் இருந்து 7,59,206 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 9 பேர் உயிரிழந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் 6 பேர் தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,712 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3,850 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் மேலும் 62,131 பேருக்கும், இதுவரை 1 கோடியே 17லட்சத்து 69,369 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 80,505 லிருந்து 7லட்சத்து 81,915 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14,940 லிருந்து 2லட்சத்து 15,360 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று அரியலூர் மற்றும் பெரம்பலூரில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


