புதுடெல்லி : சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் காலியாக இருந்த நீதிபதிகள் பரிந்துரை பட்டியலுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கண்ணம்மாள், சண்முகசுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா, ராமராஜூ, தமிழ்செல்வி, சந்திரசேகரன், சிவஞானம், வீராசாமி, இளங்கோவன், கணேசன், நக்கீரன் மற்றும் ஆனந்தி சுப்பிரமணியம் ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஐகோர்ட்டின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. தற்போது காலிப்பணியிடங்கள் 12 ஆக உள்ளது.