முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அஜித், தனுஷ், ஜோதிகா தாதாசாகேப் விருதுக்கு தேர்வு

சனிக்கிழமை, 2 ஜனவரி 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

இதில், தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருது டூ லெட் படத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது தனுஷ்-க்கு வழங்கப்படுகிறது. அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷ் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல், பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித் குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

தமிழ்

பன்முகத்தன்மை வாயந்த நடிகர் -அஜித்குமார்,  சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்), சிறந்த நடிகை - ஜோதிகா (ராட்சசி), சிறந்த இயக்குனர் - ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7), சிறந்த படம் - டூ லெட், சிறந்த இசையமைப்பாளர் - அனிருத், 

மலையாளம்

பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -மோகன்லால், சிறந்த நடிகர் - சுராஜ் வெஞ்சரமூடு (ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25) சிறந்த நடிகை - பார்வதி  திருவோத்து (உயரே),  சிறந்த இயக்குனர் - மது சி.நாராயணன் (கும்பலங்கி நைட்ஸ்), சிறந்த படம் - உயிரே, சிறந்த இசையமைப்பாளர் - தீபக் தேவ் 

தெலுங்கு

பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -நாகார்ஜுனா, சிறந்த நடிகர் -நவீன் பாலிஷெட்டி (ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா), சிறந்த நடிகை - ராஷ்மிகா மந்தனா (டயர் காம்ரேட்), சிறந்த இயக்குனர் - சுஜீத் (சாஹோ), சிறந்த படம் - ஜெர்சி, சிறந்த இசையமைப்பாளர் - எஸ்.தாமன்

கன்னடம்

பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் - சிவராஜ்குமார், சிறந்த நடிகர் - ராக்ஷித் ஷெட்டி (அவனே ஸ்ரீநாம்நாராயணா), சிறந்த நடிகை - தான்யா ஹோப் (யஜமானா), சிறந்த இயக்குனர் - ரமேஷ் இந்திரா (பிரிமியர் பத்மினி), சிறந்த படம் - முகஜ்ஜியா கனசுகலு,  சிறந்த இசையமைப்பாளர் - வி.ஹரிகிருஷ்ணா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து