எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் ஜோபைடன் மக்கள் முன்னிலையில் நேற்று போட்டுக் கொண்டார்.
அமெரிக்காவில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளும் கடந்த டிசம்பர் மாதமே தொடங்கப்பட்டுவிட்டது.
அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் போதிய நம்பிக்கை இல்லாததால் பொதுமக்கள் பலரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர். மக்களின் நம்பிக்கை அதிகரிக்க அந்நாட்டு அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையடுத்து அடுத்து அதிபராகும் ஜோபைடன் மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போவதாக அறிவித்தார். அதன்படி கடந்த டிசம்பர் 21–ம் தேதி டெல்வர் மாகாணத்தில் அவருக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்டது. இது தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
முதல் டோஸ் எடுத்துக்கொண்டு 3 முதல் 4 வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் எடுக்க வேண்டும். அதன்படி ஜோ பிடன் நேற்று காலை தனக்கான 2-வது டோசை எடுத்துக் கொண்டார்.
முதல்கட்டமாக வயதானவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 67 லட்சம் பேருக்குத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


