சென்னை : பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டு வர விரும்புகிறேன் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
உழவுக்கு வித்திட்ட இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டுவர விரும்புகிறேன். தமிழர் வழியில் செழுமை நிலையை இனி வரும் நாட்களிலும் உயர்த்திப்பிடித்து சிறந்து வாழ்த்திட முன்வருவோம். அறுவடையின் திருநாளான பொங்கல் நம் குடும்பங்களிடையே மகிழ்ச்சி, செழிப்பை திரளாக கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.