முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மருத்துவமனை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உடல் மீட்பு

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

இந்தோனேசியா : இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கினர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 3 பேரின் உடல்கள்  மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதேபோல் கவர்னரின் அலுவலகம் மற்றும் பல்வேறு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து