முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் : முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதலமைச்சர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், சிறந்த காளைகளுக்கு துணை முதலமைச்சர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா அறிவித்தார் 

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களான முத்துப்பட்டி திருநாவுக்கரசு, ,அவனியாபுரம்விஜயனும் சிறந்த காளைக்கான வில்லாபுரம் கார்த்திக் காளை தேர்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சார்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்கள் திருநாவுக்கரசு, விஜயன் ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை முதலமைச்சர் வழங்கினார்.

சிறந்த காளைக்கான பரிசினை வில்லாபுரம் கார்த்திக்கு ஒரு லட்சம் ரூபாயை துணை முதலமைச்சர் வழங்கினார் அதனைத் தொடர்ந்துஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பல்வேறு உதவிகளை செய்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றியை தெரிவித்தனர் 

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக அமைப்புச்செயலாளர் முத்துராமலிங்கம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் உட்பட பலர் இருந்தனர் 

தங்களுக்கு பரிசுத் தொகையை வழங்கி இதன் மூலம் ஜல்லிக்கட்டு வீரர்களை கௌரவபடுத்திய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் நன்றியை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து