இன்றோடு முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      தமிழகம்
Weather-Center 2020 12-01

Source: provided

சென்னை : தமிழகத்தில் இன்று ( 19-ம் தேதி ) முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

தெற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரை நீடிக்கிறது. இதன்காரணமாக தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும்.

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். 19-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முடிவுக்கு வரும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து