Idhayam Matrimony

இங்கிலாந்தில் ஜூலை 17-ந்தேதி ( மாடல் ) வரையில் ஊரடங்கு நீட்டிப்பு போரிஸ் ஜான்சன் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

லண்டன்.ஜன.26. கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியது. மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால் பொது ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது.

ஜெர்மனிக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தியது. இதனால் மக்கள் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைசர் தடுப்பூசி, அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. உருமாமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்து மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலவேறு நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தது.
இந்த நிலையில் தற்போது ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய கோரன்டைனில் ( தனிமைப்படுத்துதல் ) இருக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து இன்று இறுதி முடிவு எடுக்கபட இருக்கிறது.

இந்த ஊரடங்கால் பப்புகள், ரெஸ்டாரன்ட்கள், மால்கள் போன்றவைகளும் மூடப்பட உள்ளது. இங்கிலாந்தில் தற்போது வரை 5.9 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ள போரிஸ் ஜான்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும் வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து