ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்றும் உறைபனி கொட்டத் தொடங்கியதால் கடும் குளிர் நிலவிவருகிறது.
ஊட்டி நகரில் குறைந்த பட்ச வெப்பநிலை நேற்று முன் தினம் 1.5 டிகிரியாகவும் தொட்டபெட்டா மற்றும் தலைகுந்தா போன்ற புறநகர்ப் பகுதிகளில் பூஜ்யம் மற்றும் மைனஸ் நிலையில் பதிவாகியுள்ளது.
நேற்று காலையில் அரசினர் தாவரவியல் பூங்கா பகுதியில் 5 டிகிரியாகவும் நீராதாரங்கள் மற்றும் வனப்பகுதிகளையொட்டியுள்ள பரந்த புல்வெளிகளில் பூஜ்யம் டிகிரியாகவும் பதிவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளைக் கற்கள் விரித்தாற்போல உதகையே காட்சியளிக்கிறது.