முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்ட உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      இந்தியா
Prashant-Kishore 2024-11-02

Source: provided

பாட்னா : உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். 

பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியலில் தேர்தல் வியூக வகுப்பாளர் என்ற பெயரில் புகழ்பெற்றவர். ஆனால் இந்த பணியை விட்டு விட்டு பீகாரில் மாற்றத்தை கொண்டு வருவேன் என்று முழங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜன் சுராஜ் என்ற பெயரில் புதிய கட்சியை பிரசாந்த் கிஷோர் தொடங்கினார்.

அவரது கட்சி நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் 240 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. பீகார் அரசியலின் மையத்தளமாக இருப்பது சாதி அடிப்படையிலான வாக்கு வங்கிகள் தான். ஆனால் பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு இத்தகைய அடித்தளம் எதுவும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி, மெகா கூட்டணி ஆகியவை கிளப்பிய சூறாவளிகளால் பிரசாந்த் கிஷோர் தூக்கி வீசப்பட்டார்.

இந்த நிலையில், உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்தத் தேர்தலின் முடிவுகள் திறம்பட விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. பீகாரில் தற்போதைய பொதுக்கடன் ரூ.4.06 லட்சம் கோடி. ஒரு நாளைக்கு வட்டி ரூ.63 கோடி. ஆனால் பீகார் கருவூலம் தற்போது காலியாக உள்ளது.

உலக வங்கியில் இருந்து பீகாரின் பல்வேறு திட்டங்களுக்காகப் பெறப்பட்ட ரூ.21 ஆயிரம் கோடியில் இருந்துதான் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. 10,000 வழங்கப்பட்டது. தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ. 14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. பீகாரின் பொருளாதாரம் இவ்வளவு பெரிய தொகையை மீட்டெடுக்க முடியாது.

தற்போது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பொது நலனுக்காக செலவிட இப்போது எந்தப் பணமும் இல்லை. பொது நிதியைப் பயன்படுத்திதான், அவர்கள் மக்களின் வாக்குகளை வாங்கியுள்ளனர். இவையனைத்து எங்கள் தகவல், அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அதுவே உண்மையாக இருந்தால்’. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து