எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, பீகாரை முன்னேற்ற பாதைக்கு தனது தந்தை அழைத்துச் செல்வார் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் கூறி உள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அசுர பலத்துடன் வென்றுள்ளது. வெற்றியை ஒட்டு மொத்த கூட்டணி கட்சியினரும், தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதல்வர் நிதிஷ்குமார் மகன் நிஷாந்த் குமார் கருத்துக் கூறி உள்ளார். பாட்னாவில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது;
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிக பெரிய வெற்றியை தந்த மக்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். எங்களின் அரசாங்கம் மீண்டும் அமைய போகிறது. தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று சில எதிர்பார்ப்புகளுடன் இருந்தோம். ஆனால் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது.
இந்த அனைத்து பெருமைகளும் மக்களையேச் சேரும். கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு மக்கள் வெகுமதி அளித்துள்ளனர். மக்களின் இந்த நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார். வளர்ச்சி பணியை தொடர்ந்து, மாநிலத்தை முன்னேற்றுவார்.இவ்வாறு நிஷாந்த் குமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


