முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் பிரிமியர் லீக் ஏலத்தில் விறுவிறுப்புகள்

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

இந்தியன் பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிசை ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 14-வது சீசன் இந்தியாவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான 'மினி' ஏலம் சென்னையில் நடந்தது. 61 காலியிடத்துக்கு 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்களுடன், 3 ஐ.சி.சி., உறுப்பு அணிகளின் வீரர்கள் இடம் பெற்றனர்.

கருண் நாயர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய் என முதல் மூன்று வீரர்களை யாரும் வாங்கவில்லை. அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது. 'ஆல் ரவுண்டர்' மேக்ஸ்வெல்லை வாங்க (அடிப்படை விலை ரூ. 2 கோடி) மீண்டும் கடும் போட்டி ஏற்பட்டது. துவக்கத்தில் ரூ. 3 கோடிக்கு கோல்கட்டா கேட்டது. பின் சென்னை, பெங்களூரு அணிகள் முட்டி மோதின. தொகை அதிகரிக்க, சென்னை அணி விலகிக் கொண்டது. கடைசியில் 12 மடங்கிற்கும் அதிகமாக ரூ. 14.25 கோடி கொடுத்து பெங்களூரு அணி மேக்ஸ்வெல்லை வாங்கியது.

தென் ஆப்ரிக்க அணி 'ஆல் ரவுண்டர்' கிறிஸ் மோரிசிற்கும் (அடிப்படை விலை ரூ. 75 லட்சம்) 'டிமாண்டு' அதிகமாக இருந்தது. மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மாறி மாறி கேட்டன. கடைசியில் ரூ. 16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

சமீபத்தில் சென்னையில் நடந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் சாய்த்தவர் சுழற்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' மொயீன் அலி. இவரை வாங்க சென்னை, பஞ்சாப் இடையே போட்டி காணப்பட்டது. கடைசியில் ரூ. 7 கோடிக்கு சென்னை அணி மொயீன் அலியை வாங்கியது.

  • மொயின் அலி  ரூ.7 கோடி சென்னை,
  • ஸ்டீவ் ஸ்மித் ரூ.2.20 கோடி டில்லி,
  • இந்திய வீரர் ஷிவம் துபே  ரூ.4.40 கோடி ராஜஸ்தான்,
  • வங்க சாஹிப் அல் ஹசன்  ரூ.3.20 கோடி கோல்கட்டா,
  • டேவிட் மலான் ரூ.1.50 கோடி பஞ்சாப்,
  • ஆடம் மில்னே  ரூ.3.2 கோடி மும்பை,
  • முஸ்தாபிஜூர் ரஹ்மான் ரூ.1. கோடி ராஜஸ்தான்,
  • தமிழக வீரர் ஷாரூக்கான்  ரூ.5.25 கோடி  பஞ்சாப் அணியும் ஏலத்தில் எடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து