முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகல்

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறி கடந்த ஆண்டு ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ், அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் ஆகியோருடன் இளவரசர் ஹாரி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இனி இங்கிலாந்து அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் என்று கூறினார்.

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதி தனியாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் மேகன் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக காதலர் தினத்தின்போது அறிவித்தனர்.

அரச குடும்பத்தில் இருந்து விலகிவிட்டதால் மக்களுக்கான சேவை தொடர்பான கடமைகளை அவர் அரச பரம்பரை என்ற முறையில் செய்யமுடியாது என்று ஹாரியின் பாட்டி 2-ம் எலிசபெத் ராணி தெரிவித்து இருந்தார்.

ஹாரி இங்கிலாந்து அரச குடும்பத்தின் அரியணை வாரிசாக 6-வது இடத்தில் இருக்கிறார். என்றாலும் இவர் அரச குடும்பத்தை விட்டு விலகியது அந்த குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இந்த நிலையில் ஹாரி நிரந்தரமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அரச குடும்பத்திற்கு திரும்பி வரமாட்டோம் என்று இளவரசர் ஹாரியும், மேகனும் எலிசபெத் ராணியிடம் உறுதிப்படுத்தியிருப்பதாக, பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து