Idhayam Matrimony

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார்.

தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. இதில் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  

நேற்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண்மை, சுகாதாரம், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வருவதற்கு முன்பாக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார். அவருடன் அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் வழிபாடு செய்தனர். துணை முதல்வரும்,  நிதியமைச்சருமான  ஓ. பன்னீர்செல்வம், தமிழக பட்ஜெட்டை 10-வது முறையாக தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து