Idhayam Matrimony

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை : கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தமிழக எல்லைகளில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாத மத்தியில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. இதையடுத்து அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து விட்டது. கொரோனா தொற்று குறைவு மற்றும் அரசு அளிக்கும் தளர்வுகள் காரணமாக தமிழகம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 

இந்த நிலையில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து தமிழக எல்லைகளில்  முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைவரும் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அவர்களிடம் காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினை உள்ளதா? என கேட்டறியப்படுகிறது.  எந்தவித பாதிப்பும் இல்லை என்றால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

இதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையான கூடலூர், நெல்லை மாவட்ட எல்லையான செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியாக்கவிளை, தேனி மாவட்ட எல்லைகளிலும் சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

இதுதவிர மும்பை, பஞ்சாப் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விமானம், ரெயில் மூலம் தமிழகத்திற்கு வருகின்றனர். அவர்களை கண்காணிக்க விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் கர்நாடக அரசு அந்த மாநில எல்லைகளை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து