சென்னை : சட்டமன்ற தேர்தலில் யாரெல்லாம் தபால் வாக்கினை செலுத்தலாம் என்ற விபரத்தை வெளியிட்டிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக தேர்தல் ஆணையம், வரும் சட்டமன்ற தேர்தலில், யாரெல்லாம் தபால் வாக்கினை செலுத்தலாம் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி “ரயில்வே பணியாளர்கள், கப்பல் பணியாளர்கள், விமான பணியாளர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்” ஆகியோர் தபால் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.