Idhayam Matrimony

இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி

செவ்வாய்க்கிழமை, 9 மார்ச் 2021      சினிமா
Image Unavailable

இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகரான ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அவரது தாயார் நீது கபூர் நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், ரன்பீருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது குணமடைந்து வருகிறார். அவர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.  ரன்பீர் கபூர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் பிரார்த்தனை மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து