கட்சியை விட தேசமே பெரிது: பா.ஜ.க. நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      அரசியல்
Modi 2021 03 07

கட்சியை விட தேசமே பெரிது என்று பா.ஜ.க. நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பா.ஜ.க.வின் 41-வது தொடக்க தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றியதாவது, 

தனிநபரை விட கட்சி பெரியது கட்சியை விட தேசம் பெரியது என்று நான் எப்போதும் நம்புகிறேன். பா.ஜ.க.வின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜி காலம் முதல் இன்று வரை பா.ஜ.க.வின் பாரம்பரியம் பேணி பாதுகாக்கப்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயம். 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டுமென்ற சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றி இருக்கிறோம். காஷ்மீருக்கு அரசியலமைப்பு உரிமையை வழங்கியுள்ளோம்.பா.ஜ.க. தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து