முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்த்திபனுக்கு தடுப்பூசியால் கண், காது, முகம் வீக்கம் : ஓட்டுப்போடாததால் வருத்தம்

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சினை இருந்ததால், 2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட எனக்கு கண், காது, முகம் வீங்கிவிட்டது என நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சில காலம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அதில் தனக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:–

வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு, திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம், முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன்.

எனவே, தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற பாதிப்புகள். அதுவும் எனக்கு ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சனைகள் இருந்ததால் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில.. (தேர்தல் நாளில் ஏற்பட்டதால் ஓட்டுப்போட முடியவில்லை), எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து