முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன.  அந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமைச்செயலகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக, பல்வேறு அரசு துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் நாளை 10-ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.  மேலும் பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்து உள்ளது.  அதன் விவரம் வருமாறு:-

அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.  ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத  வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.  திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்.  அனைத்து கடைகளிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.  இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.  ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதியளிக்கப்படுகிறது.  கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.  உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவீத   இருக்கைகள் மட்டும் பயன்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது.  45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும்.  சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர்  தடுப்பூசி போட்டு கொள்ளவெண்டும், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைச செய்து கொள்வது அவசியம். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  தொழிற்சாலைகள் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து